நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி பதவி ஏற்க உள்ளார் என்பது மிகப்பெரிய சாதனை என நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்துள்ளார்.

Update: 2024-06-09 14:07 GMT

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு சென்னையிலிருந்து புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் பேட்டி:- தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி பதவி ஏற்க உள்ளார் இது மிகப்பெரிய சாதனை.. மக்கள் இந்த பாராளுமன்ற தேர்தலில் வலுவான எதிர்க்கட்சியை தேர்ந்தெடுத்துள்ளனர். இது ஜனநாயகத்திற்கு ஒரு ஆரோக்கியமான வழிமுறையாக பார்க்கிறேன்.

அடுத்த ஐந்தாண்டுகளில் ஆட்சி எப்படி இருக்கும் என கேட்டபோது நன்றாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கிறேன் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு வந்துள்ளது கலந்து கொள்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.. நாம் தமிழர் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில கட்சிகளாக அங்கீகாரம் பெற்றுள்ளது குறித்து கேட்டபோது எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பதவி ஏற்ப விழாவிற்கு சென்னையில் இருந்து புறப்பட்டார் ரஜினிகாந்த்.

Tags:    

Similar News