நாப்கினில் தங்கம் கடத்திய பெண்ணிடம் விசாரணை
நாப்கினில் தங்கம் கடத்திய பெண்ணிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-10-21 13:13 GMT
தங்கம் கடத்திய நாப்கின்
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கோலாலம்பூரில் இருந்து இரவு வந்த விமானத்தில் பயணிகளை வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர் அப்போது பெண் பயணி ஒருவரின் உடமையை சோதனை செய்த போது பேஸ்ட் வடிவில் நூதன முறையில் நாப்கினில் மறைத்து தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதன் எடை என்பது 612 கிராம் எனவும், சந்தை மதிப்பு 37.58 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெண் பயணியிடம் வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்