ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் சஸ்பெண்ட் ரத்து

அம்பாசமுத்திரம் முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங் ஐபிஎஸ் இடைநீக்கத்தை தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-01-23 01:51 GMT

பல்வீர் சிங்

காவலில் இருக்கும் சந்தேக நபர்களின் பற்களை பிடுங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. தொடர்பாக அவர் மீது துறையை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி இடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது தமிழக அரசு பணி இடை நீக்கத்தை ரத்து செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை செய்து விசாரணை மேற்கொண்டு குற்றப் பத்திரிக்கையின் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு தற்போது பணி இடை நீக்கத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது
Tags:    

Similar News