தொப்புள் கொடி வீடியோ விவகாரம்; வருத்தம் தெரிவித்து இர்பான் கடிதம்!!

குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம் தொடர்பாக வருத்தம் தெரிவித்து மருத்துவத்துறைக்கு இர்பான் கடிதம் அனுப்பியுள்ளார்.

Update: 2024-10-26 06:28 GMT

Irfan

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சென்னையை சேர்ந்த யூடியூபர் இர்பான் - ஆசிபா தம்பதிக்கு, ஜூலை 24-ந்தேதி தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும் போது, அறுவை சிகிச்சை அறையில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை, இர்பான் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ சர்ச்சையான நிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனை 10 நாட்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டது. மேலும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அதேபோல, பிரசவம் பார்த்த டாக்டர் நிவேதிதா மற்றும் இர்பான் மீது நடவடிக்கை எடுக்கும்படி, செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு, மருத்துவ ஊரக நல பணிகள் துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக இர்பானுக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த நிலையில், குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம் தொடர்பாக வருத்தம் தெரிவித்து மருத்துவத்துறைக்கு இர்பான் கடிதம் அனுப்பியுள்ளார். வெளிநாட்டில் இருப்பதால் உதவியாளர் மூலமாக தனது தரப்பு வருத்தத்தை கடித்ததின் மூலமாக தெரிவித்துள்ளார். அதில், எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை என்றும் மருத்துவ சட்டங்களை மதிப்பதாகவும் இர்பான் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News