பயிர்காப்பீட்டு திட்டத்தில் முறைகேடு - வி.ஏ.ஓ டிஸ்மிஸ்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பயிர்காப்பீட்டு திட்டத்தில் ரூ.35 லட்சம் முறைகேடு செய்த கிராம நிர்வாக அலுவலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.;
Update: 2024-02-14 12:21 GMT
ஜெயக்குமார்,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கைலாச ஊரணி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (50). இவர் கணக்கி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணி புரிந்தார். கடந்த 2022 இல் பிரதம மந்திரி பயிர் காப் பீட்டு திட்டத்தில் போலி ஆவணங்கள் தயாரித்து, மனைவி மற்றஉம் உறவினர்கள் பெயரில் ரூ. 35 லட்சம் இழப்பீடாக பெற்றுள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் அவர் ஏற்கனவே தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் ஜெயக்குமார் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் பேரில் ஜெயக்குமாரை பணி நீக்கம் செய்து அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் பி. வள்ளிக்கண்ணு உத்தரவிட்டுள்ளார்.