நெல் கொள்முதலில் முறைகேடு - இருவர் சஸ்பெண்ட்

ஒரத்தநாடு அருகே ஆட்சியர் திடீர் ஆய்வின் போது நெல் கொள்முதலில் முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியர்கள் 2 பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் கண்காணிக்க தவறிய கொள்முதல் அலுவலர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

Update: 2024-02-18 06:33 GMT
சஸ்பெண்ட்

தஞ்சை மாவட்டம் நடப்பு சம்பா பருவத்தில் 504 நேரடி  நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 1 லட்சத்து 71 ஆயிரத்து 973 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்க ஏற்படும் இடர்பாடுகளை களையவும், தரமான உறுதி செய்யவும் மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா, பஞ்சநதிக்கோட்டை நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் தீபக்ஜேக்கப் ஆய்வு மேற்கொண்டபோது கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளை மறு எடையிட்டு பார்க்கப்பட்டதில் நிர்ணயிக்கப்பட்ட எடையளவை விட கூடுதலாக இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து வட்ட அளவிலான ஆய்வுக்குழு வரவழைத்து அதன் ஆய்வில் கூடுதல் எடையளவு உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த கொள்முதல் நிலையத்தில் பணிபுரிந்த பட்டியல் எழுத்தர் மற்றும் உதவுபவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.  நிகழ்வினை கண்காணிக்க தவறியவரை  கொள்முதல் அலுவலர் பொறுப்பிலிருந்து விடுவித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் நிர்ணயிக்கப்பட்ட அளவிலான எடையைவிட கூடுதலாக சாக்குகளில் எடை வைத்து நெல் பிடிப்பது கண்டறியப்பட்டால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தீபக் ஜேக்கப் எச்சரிக்கை விடுத்தார்.

Tags:    

Similar News