கோவில் வீதியில் முறைகேடு: ஆறு மாதத்தில் ஒழுங்கு நடவடிக்கை உத்தரவு

கோவில் நிதியில் முறைகேடு செய்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர் மீதான ஒழுங்கு நடவடிக்கையை 6 மாதங்களில் முடிக்கும் படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-06-27 16:47 GMT

கோவில்

கோவில் நிதியில் 1 கோடியே 37 லட்சம் முறைகேடு செய்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத் துறை முதல் நிலை செயல் அலுவலர் முத்துசாமி மீதான ஒழுங்கு நடவடிக்கையை 6 மாதங்களில் முடிக்கும்படி, அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இருந்த நிலையில், முத்துச்சாமியின் விருப்ப ஓய்வு விண்ணப்பத்தை ஏற்க தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதை எதிர்த்து இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News