அனல் பறக்கும் கட்சத்தீவு விவகாரம் ! முழுக்கதை என்ன ?
கச்சத்தீவு விவகாரம் மீண்டும் உருவெடுத்துள்ள நிலையில் அதன் முழு கதையை பற்றி காண்போம்.
தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றன. அதில் முக்கிய பிரச்சனையாக கச்சத் தீவு விவகாரம் பற்றி பிரச்சாரங்களும் வாக்குவாதங்களும் எழுந்து வருகின்றன.
கச்சத்தீவு என்பது பாக் நீர்நிலையில் உள்ள சிறிய தீவு. ராமேஸ்வரத்திலிருந்து 12 கடல் மயில் தூரத்திலும் இலங்கையில் இருந்து 18 கடல் மயில் தூரத்திலும் அமைந்துள்ளது.
மொத்தம் 285 பரப்பளவு கொண்ட இந்த தீவு 1600 ஆம் ஆண்டுகளிலேயே மதுரையை ஆண்ட நாயக்கர்கள் மன்னர்களின் வசம் இருந்தது. இதனை அவர்கள் சேதுபதி மன்னனிடம் ஒப்படைத்தனர். அதன் பிறகு தொடர்ந்து 400 ஆண்டுகளுக்கு மேல் சுதந்திரம் அடையும் வரை அந்தப் பகுதி சேதுபதி மன்னரின் வசம்தான் இருந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் உருவான பிறகு அந்த பகுதி மாவட்ட நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
1905 ஆம் ஆண்டிலேயே ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கச்சத்தீவில் அந்தோணிய தேவாலயத்தை கட்டமைத்தார். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் தான் 1952 களில் கச்சத்தீவு ஆனது தங்களுக்கு சொந்தம் என இலங்கை பேச ஆரம்பித்தது. இதற்கிடையே 1973 ஆம் ஆண்டு இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி இலங்கைக்கு சென்று வந்தார். அதற்கு அடுத்த ஆண்டு இலங்கை அதிபர் இந்தியாவிற்கு வருகை தந்தார். இந்திய பிரதமரும் இலங்கை அதிபரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு ஜூன் 28 1974 இல் கச்சத்தீவை இலங்கை வசம் ஒப்படைத்து ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஒப்பந்தத்தில் தமிழக மீனவர்கள் கட்சத்தை விற்கு வருகை தரலாம், மீன் பிடிக்கலாம், ஒவ்வொரு ஆண்டும் நடைபெற உள்ள கச்சத்தீவு அந்தோனியார் திருவிழாவை பங்கேற்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா மற்றும் இலங்கை அதிகாரிகள் இடையே ஆன பேச்சுவார்த்தையில் கட்ச தீவில் சென்று தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கக் கூடாது என்றும், திருவிழாவிற்கு வருகை தரலாம் என்றும் முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தமானது.
இதனை அடுத்து இலங்கையில் இனக்கலவரம் தொடர்ந்ததை அடுத்து 1983 - 2002 வரை கட்ச தீவில் அந்தோனியார் திருவிழா நிறுத்தப்பட்டது. இதனால் தமிழர்கள் கட்ச தீவிற்கு செல்ல முடியவில்லை.
அதன் பிறகு திருவிழாக்களில் தமிழக மீனவர்கள் தற்போது வரை பங்கேற்று வருகின்றனர். கச்சத்தீவை 1974 முதல் இலங்கையிடம் ஒப்படைத்தது சர்வதேச விதிமுறைகளை மீறியது என தொடர்ந்து மீனவர்கள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக ஆடிஐ மூலம் பெற்ற தகவல்களை பகிர்ந்து கச்சத்தீவை தாரை வாத்து கொடுத்தது காங்கிரஸ்-திமுக தான் என்று கடுமையாக சாடியுள்ளார். மேலும் மத்திய அரசு கச்சத்தீவை மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே கச்சத்தீவு தாரை வாத்து கொடுக்கப்பட்டதை திமுக எந்த காலத்திலும் ஏற்கவில்லை என்றும், கச்சத்தீவை இலங்கைக்கு அளிப்பதில் எந்த விதத்திலும் உடனடியாக இல்லை என்றும் திமுக தரப்பினர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் சில பரபரப்பான விளக்கங்களை கொடுத்துள்ளார். அதாவது கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலையும் இந்தியா அனுப்பவில்லை என்றும், கச்சத்தீவு தொடர்பாக இந்தியாவிடம் இருந்து இதுவரை எந்த ஒரு கோரிக்கையும் வரவில்லை என்றும் ஒருவேளை கோரிக்கை வந்தால் அதற்கு இலங்கை வெளிவுறவுத்துறை பதில் அளிக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.