சட்டமன்றத்தில் தேவர் படத்தை வைத்தது அதிமுக அரசுதான் - எடப்பாடி பழனிசாமி
Update: 2023-10-30 09:43 GMT
எடப்பாடி பழனிசாமி
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி , சட்டமன்றத்தில் தேவர் படத்தை வைத்தது அதிமுக அரசுதான். சென்னை நந்தனத்தில் தேவர் சிலையை அமைத்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எனக் குறிப்பிட்டுள்ளார்.