சபை போதகர்களிடம் வாக்கு சேகரித்த ஜெகத்ரட்சகன்!
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சபை போதகர்களிடம் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் வாக்கு சேகரித்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-03 06:30 GMT
ஜெகத்ரட்சகன்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சபை போதகர்கள் மற்றும் கமிட்டி சங்கத்தினர் சார்பில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரும், ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளருமான காந்தி கலந்துகொண்டு வேட்பாளர் ஜெகத்ரட்சகனை அறிமுகம் செய்து வைத்து வாக்குகளை சேகரித்தார். இந்த நிகழ்வில் திமுக சுற்றுச்சூழல் அணி பிரிவின் மாநில துணைச் செயலாளர் வினோத் காந்தி மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.