''அரசியல்வாதியோடு வாதிடலாம் அரசியல் வியாதி உள்ளவரிடம்..?'' - ஜெயக்குமார்

Update: 2024-05-29 10:56 GMT

ஜெயக்குமார்

ஜெயலலிதாவை இந்துத்துவ தலைவர் என அண்ணாமலை கூறியதற்கு அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருச்சியிலிருந்து விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜெயலலிதா இல்லை என்றவுடன் அவதூறு பரப்பி அவரை களங்கபடுத்த நினைப்பவர்கள் காணாமல் போவார்கள். பாஜகவின் கொள்கை கொடூரமானது. ஒருவன் சூடாக வைத்த பாலை குடித்தவுடன் நாக்கு சுட்டுவிடுமாம்; அதன்பின் மோரை பார்த்தால்கூட ஊதி ஊதி தான் குடிப்பானாம், அது அண்ணாமலை தான். மத நல்லிணக்கத்தோடு வாழக்கூடிய அளவிற்கு, நல்ல சூழ்நிலையை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி காட்டியவர், ஜெயலலிதா.

பாஜகவில் தலைவர்கள் இல்லையா? பாஜகவை வளர்க்கக் கஷ்டப்பட்டவர் அத்வானி வாஜ்பாய் அவர்களைப் பற்றி ஏன் பேச மறுக்கிறார், அண்ணாமலை. திமுகவின் B Team ஆக செயல்படுகிறார். ஜெயலலிதாவை ஒரு மதத்துக்குள் அடக்கும் வகையில் ஒரு இழிவான செயலை செய்து வருகின்றனர். தெய்வப்பற்று இருப்பதால் நீங்கள் எல்லோரும் மதவாதிகளா?   மதவெறி கொண்ட யானையை விட மதவெறி பிடித்துள்ள பாஜக நாட்டிற்கு ஆபத்தானது என்பது அண்ணாமலை போன்றோரின் பேச்சுகளில் இருந்து உணர முடிகிறது.

அரசியல்வாதியோடு வாதிடலாம்; ஆனால், அரசியல் வியாதி உள்ள அரசியல் வியாபாரிடம் விவாதிக்கத் தயாராக இல்லை''  என தெரிவித்தார்.


Tags:    

Similar News