விஜயகாந்த் குடும்பத்தினரை சந்தித்து ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் ஆறுதல்
விஜயகாந்த் அவர்களுக்கு விருது வழங்குவது தொடர்பாக மத்திய அரசிடம் கோரிக்கையாக எடுத்து சொல்வோம் என ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Update: 2024-01-05 07:57 GMT
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜயபிரபாகன் ஆகியோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் கேப்டன் இல்லை என்பது நல் மனம் படைத்த அனைவருக்கும் ஆழமான வேதனை ஏற்படுத்தியிருக்கிறது. கேப்டன் விஜயகாந்த் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு பணியாற்றுவதை கைவிடவில்லை. கேப்டன் விஜயகாந்த் உடன் மிகுந்த நட்புடன் இருந்தேன். விஜயகாந்த் இழுப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது. கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு சிலை வைப்பது வரவேற்கதக்கது. விஜயகாந்த் அவர்களுக்கு விருது வழங்குவது தொடர்பாக மத்திய அரசிடம் கோரிக்கையாக எடுத்து சொல்வோம் என கூறினார்.