ஜே.பி.நட்டா சைவமா?, அசைவமா? - கார்த்தி சிதம்பரம்
தமிழகத்திற்கு வரும் பாஜக தலைவர் ஜே.பி நட்டா சைவமா, அசைவமா என தெரியாது, அசைவமாக இருந்தால் எந்த ஹோட்டலில் சாப்பிடலாம் கூறுவேன் என கார்த்திக் சிதம்பரம் கிண்டல் செய்தார்.
சிவகங்கை அருகே உள்ள வாணியங்குடியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள வந்த காங்கிரஸ் நாடாளுமன்ற வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்த போது, பாஜகவின் இந்து, இந்துத்துவா அரசியலை தமிழகத்தில் கண்டிப்பாக நிராகரிப்பார்கள். தமிழகம் வரும் நட்டா, சைவமா, அசைவமா என தெரியாது, அசைவமாக இருந்தால் எந்த ஹோட்டலில் சாப்பிடலாம் கூறுவேன் என கிண்டல் செய்தார். நீட் தேர்வு நடத்த அமெரிக்க நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது வியப்பளிப்பதாகவும், மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் போது எல்லா மாநில அரசின் ஒப்புதலுடன் ஒரே ஜிஎஸ்டியை அமல்படுத்துவோம்.
கச்சா எண்ணெய் விலை குறையும் போது, பெட்ரோல் விலையும் குறையும். ஒரே ஜிஎஸ்டி அமல்படுத்தும் போது பெட்ரோல் விலை மேலும் குறையும். இப்போது இருப்பது ஜிஎஸ்டி அல்ல, ஜிஎஸ்டி என்ற பெயரில் போடப்படும் வரி மட்டும் என்றார். மேலும், தனக்கு கட்சியிலும், மக்களிடமும் எதிர்ப்பு இல்லை என்ற அவர், சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்த சிலர் அவதூறு பரப்புகின்றனர். இது எல்லாம் ஒரு செட்டப்தான். ஆனால், மக்களிடம் தனக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக தெரிவித்தவர். மக்களிடம், அரசியல் மீதும், அரசியல் பரப்புரை மீதும், அரசின் களத்தில் பங்கேற்பதிலும், விருப்பம் குறைந்து விட்டது உண்மைதான் என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.