ஜூலை 12 பாம்பன் குமரகுரு தாசர் திருக்கோயில் குடமுழுக்கு

அருள்மிகு ஸ்ரீமத் பாம்பன் குமரகுரு தாசர் திருக்கோயில் குடமுழுக்கு வருகின்ற ஜூலை 12ஆம் தேதி நடைபெற உள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

Update: 2024-06-01 11:02 GMT

அருள்மிகு ஸ்ரீமத் பாம்பன் குமரகுரு தாசர் திருக்கோயில் குடமுழுக்கு வருகின்ற ஜூலை 12ஆம் தேதி நடைபெற உள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.


சென்னை திருவான்மியூர் மயூரப்புரம் அருள்மிகு ஸ்ரீமத் பாம்பன் குமரகுரு தாசர் திருக்கோயில் சர்வே எண் 172 /2 -ல் மூணு ஏக்கர் 11 சென்ட் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் டி டி குப்புசாமி செட்டியார் என்பவரால் 9 9 1984 அன்று தாமாக முன்வந்து இந்து சமய அறநிலை துறை வசம் திருக்கோயில் ஒப்படைக்கப்பட்டு அன்று முதல் தொடர்ச்சியாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

1985 ஆம் ஆண்டு முதல் மகா தேஜோ மண்டலத்தாரால் ( மூன்று மண்டலத்தார்கள் ) இது திருக்கோயில் அல்ல சமாதி என விலம்புகை செய்திட பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகளை கொண்ட அமர்வானது வழக்கு எண் WA. 2191/2018, WA. 2316/2018 WA. 2390/2018 வழக்குகளின் இறுதி தீர்ப்பை மார்ச் 27 அன்று வழங்கியது. இந்த தீர்ப்பில் அருள்மிகு ஸ்ரீமத் பாம்பன் குமரகுரு தாசர் திருக்கோவில் எனவும் அதன் நிர்வாகம் இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை உறுதி செய்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

எனவே மேற்குறி பட்டம் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படியும் இந்து சமய அறநிலைத்துறை சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டும் திருக்கோயில் நிர்வாகம் நடைபெறுவதற்கு ஏதுவாக திருக்கோயில் நிர்வாகத்திற்கு விரோதமாக செயல்பட்டு வரும் அமைப்பினை சின்னசாமி சமாதி நிலையத்திலிருந்து வெளியேற்றி அருள்மிகு ஸ்ரீமத் பாம்பன் குமரகுரு தாசர் திருக்கோயில் நேரடி ஆளுகையின் கீழ் கொண்டுவரப்பட்டது.

மேலும் மாண்பாமை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவினை அடுத்து சுமார் 36 ஆண்டுகளாக பக்தர்கள் எதிர்பார்த்த அருள்மிகு ஸ்ரீமத் பாம்பன் குமரகுரு தாசர் திருக்கோயில் குடமுழுக்கு வெகுவிமரசையாக வரும் ஜூலை 12ஆம் தேதி அன்று நடத்தப்பட உள்ளது என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags:    

Similar News