கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழப்பு : அமைச்சர் மற்றும் அரசு அலுவலர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
அமைச்சர்கள் மற்றும் அரசு அலுவலகத்தில் கலந்து கொண்டனர்.
Update: 2024-06-20 06:36 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (20.6.2024) தலைமைச் செயலகத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சி துறை அமைச்சர் சு. முத்துசாமி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, வளர்ச்சி ஆணையர் / முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர்-| நா. முருகானந்தம், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் அமுதா, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் செந்தில்குமார், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.