மயிலாடுதுறையில் கமலஹாசன் போட்டி - பரபரப்பு போஸ்டர்

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கமலஹாசனுக்கு அழைப்பு விடுத்து நம்மவர் கமலஹாசன் நற்பணி இயக்கம் என்ற பெயரில் மயிலாடுதுறை முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது

Update: 2024-02-21 06:26 GMT

போஸ்டர் 

மக்கள் நீதி மையம் ஒரு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் என்று அதன் தலைவர் கமலஹாசன் அறிவித்திருந்ததாக  கூறப்படுகிறது. அதில் அவரை போட்டியிடப் போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது, இந்நிலையில் திமுக கூட்டணியில் இணைந்து செயல்பட முழு முனைப்புடன் வேலை நடைபெற்று வருகிறது .அவரை மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் நிறுத்த வேண்டும் என்று தொண்டர்கள் மத்தியில் விருப்பம் நிலை வருகிறது. நம்மவர் கமலஹாசன் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நம்மவரே மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அழைக்கிறோம் என்று வாசகம் அடங்கிய போஸ்டர் மயிலாடுதுறை நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி திமுக வசம் உள்ளது. திமுக கூட்டணியுடன் மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டால் எளிதில் வெற்றி பெறுவார் என கமல்ஹாசன் தொண்டர்கள் மத்தியில் விருப்பம் நிலவுகிறது. அதன் வெளிப்பாடு தான் இந்த போஸ்டர்.
Tags:    

Similar News