நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட ஒரு கோடி நிதி வழங்கிய கமலஹாசன்
நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கு ஒரு கோடி ரூபாய் வைப்பு நிதியை கமலஹாசன் வழங்கினார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-09 12:18 GMT
நிதி வழங்கிய நடிகர் கமல்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர், மூத்த நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன் இன்று அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளான பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோரிடம் நடிகர் சங்க கட்டட பணியைத் தொடர்வதற்காக சங்கத்துக்கு வைப்பு நிதியாக ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினார்.