காஞ்சிபுரம் : புத்தர் புடைப்பு சிற்பம் கண்டெடுப்பு
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் தெற்கு சுற்றுச்சுவர் பகுதியில், மூன்று அமர்ந்த நிலை புத்தர் புடைப்பு சிற்பங்களை, தொண்டை மண்டல வரலாற்று ஆய்வு சங்கத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.
Update: 2024-02-04 03:28 GMT
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் தெற்கு சுற்றுச்சுவர் பகுதியில், மூன்று அமர்ந்த நிலை புத்தர் புடைப்பு சிற்பங்களை, தொண்டை மண்டல வரலாற்று ஆய்வு சங்கத்தினர் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து, ஆய்வு சங்க செயலரும், வரலாற்று ஆர்வலருமான ராதா பாலன் என்ற ரூத் கூறுகையில், ''காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் ராஜகோபுரத்தின் அருகே, பழைய வீட்டின் கட்டுமானம் இருந்தது. சமீபத்தில், அந்த கட்டுமானம் அகற்றப்பட்டபோது, அங்கு பவுத்த சிற்பங்கள் இருப்பதை கண்டறிந்தோம். ''சில ஆண்டுகளுக்கு முன், கோவிலின் சுற்றுச்சுவரில் இருந்து மாயமான தமிழகத்தின் ஒரே பரி நிர்வாண புத்தர் சிற்பமும் சேர்த்து கணக்கிட்டால், எட்டு சிற்பங்கள்,'' என்றார்."