விஜயகாந்த் குடும்பத்தினரை சந்தித்து கனிமொழி எம்பி ஆறுதல்
விஜயகாந்த் மறைவையொட்டி சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது குடும்பத்தினரை சந்தித்து கனிமொழி எம்பி ஆறுதல் தெரிவித்தார்.;
Update: 2024-01-31 07:28 GMT
கனிமொழி அஞ்சலி
விஜயகாந்த் மறைவையொட்டி அவரது நினைவிடத்தில் பல்வேறு கட்சித் தலைவர் நடிகர்கள் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று அவருடைய திருஉருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் தேமுதிக பொதுச் செயலாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.