மோடியின் பழைய பேச்சை பகிர்ந்து கலாய்த்த கனிமொழி எம்பி
மாநில அரசை என்ன பிச்சைக்காரர் என்று நினைக்கிறீர்களா?என்று குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது பேசியதை கனிமொழி எம்பி தனது X தளத்தில் பதிவு செய்து கலாய்த்துள்ளார். ;
கனிமொழி எம்பி
திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி, பிரதமர் நரேந்திரா மோடி அவர்கள் குஜராத் முதலமைச்சராக இருந்த பொது நிதி பகிர்வு பற்றிப் பேசிய காணொளியைத் தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளார். Once upon a time A CM now பின் (ஒரு காலத்தில் முதலமைச்சர், இப்போது பிரதமர்) என்கிற தலைப்பில். எனது சகோதர சகோதரிகளே, ஒவ்வொரு வருடமும் குஜராத் மாநில அரசு, ஒன்றிய அரசுக்கு வரியாக ரூ.60,000 கோடியை அளித்துவருகிறது.
பதிலாக குஜராத் அரசுக்கு என்ன கிடைக்கிறது? ரூ. 8000 கோடி..ரூ.10000 கோடி..ரூ. 12000 கோடி.. ஒன்றிய அரசு என்ன கூறுகிறது? எப்போதும் நாங்கள் திருப்பிக் கொடுத்தோம், போதுமான அளவு திருப்பிக் கொடுத்தோம் என்று கூறுகிறது.
குஜராத் மாநில அரசை என்ன பிச்சைக்காரர் என்று நினைக்கிறீர்களா? ஒன்றிய அரசிடம் இருந்து தங்கள் நிதியைப் பெற எப்போதும் குஜராத் மாநில அரசு பிச்சை எடுக்க வேண்டுமா? என்று பிரதமர் நரேந்திரா மோடி அவர்கள் குஜராத் முதலமைச்சராக இருந்த பொது பேசியுள்ளார்