கனியாமூர் பள்ளி மாணவி மரணம் : விசாரணை குறித்து நீதிபதி கேள்வி.
கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து நடந்த கலவரம் தொடர்பாக மாணவியின் தாயாரை இன்னும் ஏன் விசாரிக்கவில்லை ? என்று காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
Update: 2024-06-28 02:28 GMT
கடந்த 2022 ஆம் ஆண்டு பள்ளி மாணவி உயிரிழந்ததை அடுத்து பள்ளி அடித்து நொறுக்கப்பட்டு, வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இந்த வழக்கு விசாரணையை வேறு புலன் விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரி, பள்ளி தாளாளர் ரவிக்குமார் மனு அளித்தார். சம்பவம் தொடர்பாக 519 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 166 பேரின் செல்ஃபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வளவு பெரிய கூட்டம் எப்படி பள்ளி வளாகத்தில் கூடினர் என நீதிபதி கேள்வி எழுப்பினார். சம்பவம் நடந்து இரண்டாண்டுகள் ஆகியும் ஏன் இன்னும் அவர்களிடம் விசாரணை நடத்தவில்லை? நல்ல நாளுக்காக காத்து கொண்டிருக்கிறீர்களா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். விசாரணையின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.