கன்னியாகுமரி : கடல் பாறையில் சிக்கி தவித்த பெண் மீட்பு

Update: 2023-12-20 09:13 GMT
கடல்பாறையில் சிக்கிய பெண் .

கன்னியாகுமரியில் கடல் நடுவே விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது.   திருவள்ளுவர் சிலை பகுதியில்  மேம்பாட்டு பணிகள்  நடப்பதால் அங்கு படகு போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே அங்கு துப்பாக்கி எழுதிய போலீசார், பணியாளர்கள் மட்டும் இருப்பார்கள்.     

இந்த நிலையில் நேற்று காலை அங்குள்ள போலீசார் பணியாளர்களை கரைக்கு அழைத்து வருவதற்காக படகு ஒன்று புறப்பட்டது. அப்போது திருவள்ளுவர் சிலையின் பின்புறம் ஒரு பாறையில் இருந்து காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று குரல் கேட்டது.      படகு இயக்கியவர் அந்தப் பாறைக்கு படகை செலுத்தி பார்த்த போது,  பெண் ஒருவர் கூச்சலிட்டு அமர்ந்திருந்தார். இதையடுத்து அங்கிருந்த பணியாளர்கள் உதவியுடன் பெண்ணை கயிறு கட்டி மீட்டு படகில்  ஏற்றி கரை சேர்த்தனர்.       

விசாரணையில் அவர் களியக்காவிளை  அருகே சூரியகோடு பகுதி ஸ்ரீஜா (45) என்பது தெரிய வந்தது. கடந்த  ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுறி வந்தவர் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கி ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டார். அப்போது திருவள்ளூர் சிலையருகே உள்ள பாறையில்  கெட்டியாக பிடித்துக் கொண்டார். திருவள்ளுவர் சிலைக்கு படகு இயக்கப்பட்டதால் யாருக்கும் அவர் இருப்பது தெரியவில்லை. இதனால் இரவுகள் பகல் என 48 மணி நேரத்தை பட்டினியுடன் திகிலுடனும், பயத்துடனும் கழித்துள்ளார். அதிர்ஷ்டவசமாக நேற்று படகு சென்றதால் அந்தப் பெண் காப்பாற்றப்பட்டார்.  தொடர்ந்து அவரது  தம்பிக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர் வந்து அக்காவை அழைத்து சென்றார். தனது சகோதரி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News