சதுமுகையில் கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் விழா
சதுமுகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் விழாவை திமுகவினர் கொண்டாடினர்;

சதுமுகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் விழாவை திமுகவினர் கொண்டாடினர்
ஈரோடு வடக்கு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்கு ஒன்றியம் சதுமுகை ஊராட்சி நடுப்பாளையம் கிளை #ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் N நல்லசிவம் ஆணைக்கிணங்க# இன்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 101வது பிறந்த நாளையொட்டி சத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் ஐ ஏ தேவராஜ் அவர்களின் ஆலோசனைப்படி கலைஞர் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் உமா பாரதி திருமூர்த்தி கழக மூத்த முன்னோடி செல்வராஜ் செம்படாபாளையம் கிளைச் செயலாளர் சம்பத்குமார் அனுப்பர்பாளையம் கிருஷ்ணமூர்த்தி மாணவரணி அமைப்பாளர் N திருமூர்த்தி துணை அமைப்பாளர் NSE வினோ பாரதிகட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்