மகளிர் இடஒதுக்கீடு மசோதா; அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்பு
Update: 2023-09-20 10:06 GMT
எடப்பாடி பழனிச்சாமி
தமிழகத்தில் உள்ளாட்சி பதவிகளில் மகளிருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கியவர் ஜெயலலிதா. அதிமுக 1991ல் ஆட்சியை பிடித்தபோது ஜெயலலிதாவுடன் 31 பெண்கள் எம்எல்ஏக்களாகினர். மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் இந்தியாவிற்கே முன்னோடி அதிமுக தான் என்பது பெருமை. தற்போது இந்தியா முழுமைக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதை வரவேற்கிறேன் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.