பாஜகவிற்கு சவால் விட்ட கேபி முனுசாமி

தமிழ்நாட்டை சேர்ந்த 2 மத்திய அமைச்சர்களை பாஜகவிற்கு தைரியம்,தில்லு இருந்தால் தமிழகத்தில் எந்த தொகுதியிலாவது நிறுத்துங்கள் என கேபி முனுசாமி பேச்சு.

Update: 2024-03-02 03:19 GMT

கேபி முனுசாமி 

 கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி சூளகிரி ரவுண்டானாவில் ஜெயலலிதா அவர்களின் 76வது பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.  அதிமுகவின் துணை பொதுசெயலாளர் கே.பி.முனுசாமி அவர் பேசுகையில்: தமிழகத்தை சேர்ந்த 2 மத்திய அமைச்சர்கள் ஆட்சியில் உள்ளார்கள்,

நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உண்மையிலேயே பாஜகவிற்கு தைரியம், தில்லு இருந்தால் தமிழகத்தில் 2 அமைச்சர்களை எந்த தொகுதியிலாது நிறுத்துங்கள் தமிழக மக்கள் என்ன பாடம் புகட்டுவார்கள் தெரியவரும் என சவால் விடுத்தார்.

Tags:    

Similar News