தாதன்குளம் அருகே ரயிலை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு பாராட்டு
தாதன்குளம் அருகே ரயிலை காப்பாற்றிய ரயில்வே ஊழியர்களை பாராட்ட 40 வருடம் கழித்து ஊழியர் சொந்த ஊர் வந்துள்ளார்.;
ரயில்வே ஊழியருக்கு பாராட்டு
தூத்துக்குடி மாவட்டம்,தாதன்குளத்தினை சேர்ந்தவர் சிவமுருகன். இவர் கடந்த 40 வருடங்களுக்கு முன்பு தாதன்குளத்தினை விட்டு தனது தாய் செல்லம்மாளுடன் நெய்வேலி சென்றார். அங்கே நிலக்கரி சுரங்கத்தில் போர்மேனாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செல்வ ரோஸ்மேரி.
இவருடன் நெய்வேலியில் வசித்து வருகிறார். கடந்த 17 ந்தேதி மழை வெள்ளத்தில் ஸ்ரீவைகுண்டத்தில் ரயிலை நிறுத்தி 800 பேரை காப்பாற்றிய ரயில்வே டிராக் மேன் செல்வக்குமாருக்கு பாராட்டு குவிந்தது. அவருக்கு ரயில்வே துறையினர் ரூபாய் 5 ஆயிரம் கொடுத்து வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
இதுகுறித்து அவர் தாதன்குளத்தில் உள்ள உறவினர் ராமர் என்பவரிடம் விசாரித்து உள்ளார். அவர் ரயிலை நிறுத்த காரணமானவர்கள் 3பேர் செல்வக்குமாருடன் கிருஷ்ணகுமார், விக்னேஷ் என்பரும் கொட்டு மழையில் தொங்கிய தண்டவாளம் வழியாக சென்று காப்பாற்றி உள்ளனர். என்று கூறியுள்ளார்.
உடனே அவர் தன் மனைவியுடன் 40 வருடம் கழித்து ஊருக்கு வந்தார். மூன்று பேரையும் அழைத்து அவர்களை பாராட்ட முடிவு செய்தார். செல்வக்குமாருக்கு இரயில்வே நிர்வாகம் 5 ஆயிரம் கொடுத்து உற்சாகபடுத்தி, மற்ற இருவருக்கும் பணம் கொடுக்காததை கேள்வி பட்ட அவர் கிருஷ்ணகுமாருக்கும், விக்னேஷ்க்கும் பணம் கொடுக்க முடிவு செய்தார்.
அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கிருஷ்ணக்குமாருக்கு 5 ஆயிரம் கொடுத்தார். விக்னேஷ் ஊருக்கு சென்று இருப்பதால் வந்தவுடன் அவருக்கு கொடுக்கவும் முடிவு செய்துள்ளார். 3 பேரையும் பாராட்டி 3 பேரையும் கௌரவிக்கவேண்டும். ஒருவரை மட்டும் பாராட்டி இருப்பது ரயில்வே துறையின் ஓர வஞ்சனை என்று கூறிய அவர், இந்த நிகழ்வு ரயில்வே தலைமை வரை சென்ற சேர வேண்டும் என்று கூறினார்.
40 வருடம் கழித்து சொந்த ஊர் வந்து ரயில்வே ஊழியரை பாராட்டிய சிவகுமாரை ஊர் மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.