உலக அளவிலான வட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சேலம் வந்த வீரருக்கு பாராட்டு

விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்;

Update: 2023-12-11 01:48 GMT

வெற்றி பெற்ற வீரரை வரவேற்றபோது

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
உலக அளவில் தாய்லாந்தில் நடந்த வட்டு மற்றும் குண்டு எறிதல் போட்டியில் சேலம் வீரர் சஞ்சய் கண்ணா கலந்து கொண்டு விளையாடினார். இதில் வட்டு எறிதல் பிரிவில் தங்க பதக்கமும் குண்டு ஏறிதல் பிரிவில் வெண்கல பதக்கம் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார். இந்த நிலையில் இன்று சென்னையில் இருந்து கோவை செல்லும் சதாப்தி ரயிலில் சேலம் ரெயில் நிலையத்துக்கு அவர் வந்தார் . அவருக்கு சேலம் மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர் தமிழ்ச்செல்வன், ஓய்வு எஸ்ஐயும், காவல்துறை விளையாட்டு வீரருமான கென்னடி ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது இந்திய கபடி விளையாட்டு வீரர் அம்பேஸ், முருகன் கபடி குழு தங்கராஜ், மனோஜ், சூர்யா ஸ்போர்ட்ஸ் அகாடமி பெரிய புதூர் குமார் ,வெற்றி மற்றும் சாதனை படைத்த சஞ்சய் கண்ணாவின் தந்தை அழகாபுரம் கண்ணன் , தாய் மாலா உள்பட பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News