குலசை முத்தாரம்மன் கோவில் தசரா சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் நடைபெற்றது
Update: 2023-10-25 08:08 GMT
உலகப் புகழ் பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு அடுத்த படியாக தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு அருகிலுள்ள குலசேகரபட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் ஆலயத்தில் ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடை பெற்று வருவது வழக்கம். பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தும் பல்வேறு வேடங்கள் அணிந்தும் காணிக்கை பெற்று அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம். கடந்த 15ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கிய இந்த தசரா திருவிழா இந்த நிலையில் குலசை தசரா திருவிழாவில் விரதமிருந்து காளி, அம்மன், கிருஷ்ணன், சிவன் போன்ற வேடம் அணியும் பக்தர்கள் சொந்த ஊர்களில் தங்கள் குழுவினருடன் பாரம்பரிய கலையான கரகாட்ட கலைஞர்களுடன் நடனமாடி காணிக்கை பெற்று வந்தனர் ஆண்டுதோறும் 400க்கும் மேற்பட்ட தசரா குழுக்கள் வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூல் செய்தனர் தசரா திருவிழாவின் 10 வது நாளான நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணி அளவில் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் ஆலய கடற்கரை திடலில் நடைபெற்றது முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி சூரசம்ஹாரம் நடைபெறும் பகுதிக்கு வருகை தந்தார் அங்கு தன் முகத்துடன் எதிர்கொண்ட மகிஷாசுரனை வதம் செய்தார் தொடர்ந்து சிங்கமுகம் உருவில் வந்த சூரனையும் தொடர்ந்து மாட்டுத் தலையுடன் வந்த சூரனை வதம் செய்த அம்மன் தொடர்ச்சியாக சேவல் உருவில் வந்த சூரனை வதம் செய்தார் தொடர்ந்து முத்தாரம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன சூரசம்ஹாரம் நிகழ்ச்சியொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் சூரசம்ஹாரம் நிறைவு பெற்றதை தொடர்ந்து வான வேடிக்கையும் நடத்தப்பட்டது இந்த சூரசம்கார நிகழ்ச்சியொட்டி 2500 மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் இதுபோல் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் விரிவாக செய்யப்பட்டிருந்தது