குமரி : 11  நிவாரண முகாம்களில் 553 பேர் தங்க வைப்பு

Update: 2023-12-18 07:39 GMT
நிவாரண முகாமை பார்வையிட்ட அமைச்சர்.
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கன்னியாகுமரி  மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளது. இந்த நிவாரண முகாம்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.   

வடிவீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளியில் 20 பேரும், தோப்பூர் அரசு தொடக்கப்பள்ளியில் 4 பேரும், கன்னியாகுமரி பேரிடர் நிவாரண மையத்தில் 146 பேரும், இரவிபுதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 53 பேரும், கோட்டை விளை அரசு நடுநிலைப்பள்ளியில் 21 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  தோவாளை கிருஷ்ணசாமி மண்டபத்தில் 213 பேரும், திருப்பதிசாரம் தனியார் பள்ளி ஒன்றில் 35 பேரும், ஏழுதேசம் பற்று அரசு உயர்நிலைப்பள்ளியில் 11 பேரும், விளவங்கோடு அரசு உயர்நிலைப்பள்ளியில் 15 பேரும், ஏழுதேசம் பேரிடர் பாதுகாப்பு மையத்தில் 5 பேரும், சுசீந்திரம் கிருஷ்ணா திருமண மண்டபத்தில் 30 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.      

மாவட்டம் முழுவதும் 212 ஆண்களும், 273 பெண்களும், 67 குழந்தைகள் ஒரு திருநங்கை என 553 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News