குமரி : மூளைச்சாவு அடைந்த வாலிபரின் 7 உடலுறுப்புகள் தானம்

Update: 2023-11-26 03:42 GMT
செல்வின் சேகர்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

குமரி மாவட்டம் புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியை  செல்வின் சேகர் (36) இவர் மருத்துவம் சார்ந்த முதுநிலை பட்டதாரி.  கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.  அப்போது அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.      இதற்கிடையில் செல்வின் சேகர் உயிருடன் இருக்கும்போதே தான் இறந்த பின்பு தனது உடல் உறுப்புகளை தானம்  செய்ய வேண்டும் என்று மனைவிடம் கூறி இருந்தார்.  அதன்படி உறவினர்கள் முன் வந்து ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு  எடுத்துக் கூறி அவரது இதயம், நுரையீரல், கல்லீரல், கண்கள் உட்பட ஏழு உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.      

Advertisement

இதையடுத்து நேற்று அவரது இதயம் கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள 14 வயது  சிறுவன் ஒருவருக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டு, திருவனந்தபுரத்திலிருந்து கொல்லத்துக்கு ஹெலிகாப்டரில் கொண்டு சென்று அந்த சிறுவனுக்கு பொருத்தப்பட்டது.   அவரது உடல் சொந்த ஊரான குமரி மாவட்டம் கீழ்குளத்திற்கு நேற்று மாலை கொண்டுவரப்பட்டது. பின்னர் குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில், குமரி சப் கலெக்டர் கவுசிக், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி டீன் பிரின்ஸ்பயஸ்  மற்றும் தாசில்தார்கள், கிராம நிர்வாகிகள் உட்பட அரசு அதிகாரிகள் அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News