குமரி : வெள்ளக்காடாக மாறிய திற்பரப்பு அருவி. 

Update: 2023-12-18 04:51 GMT
 திற்பரப்பு அருவி.
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு அருவி சிறந்த சுற்றுலாத்தலமாகும். மலையில் இருந்து இயற்கையாக  வரும் தண்ணீர் அருவி போல பாய்வதால் இதை குமரியின் குற்றாலம் என அழைக்கப்படுகிறது.  கன்னியாகுமரிக்கு  நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள்,  திற்பரப்பு அருவியில் குளிக்க குவிவது வழக்கம்.     

 இந்த நிலையில் தற்போது குமரியில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால், குமரி மாவட்ட அணைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அணைகளில் இருந்தது 10 ஆயிரம் கன அடிக்கு மேல் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப பெருக்கால் , திற்பரப்பு அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அருவி ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News