கள்ளபிரான் சுவாமி கோவிலில் குரோதி வருட பஞ்சாங்கம் வாசிப்பு

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் யுகாதி பண்டிகைைய முன்னிட்டு குரோதி வருட பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2024-04-11 02:05 GMT

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் யுகாதி பண்டிகைைய முன்னிட்டு குரோதி வருட பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சி நடந்தது.


தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்மிக சிறப்புபெற்ற நவதிருப்பதி கோவில்களில் தமுதல் ஸ்தலமான கள்ளபிரான் சுவாமி பெருமாள் கோவிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு ‘குரோதி வருட பஞ்சாங்கம்' வாசித்தல் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. முன்னதாக, கோவிலில் காலை 7 மணிக்கு விஸ்வரூபமும், காலை 8 மணிக்கு திருமஞ்சனமும், புதிய வஸ்திரம் சாத்துதலும், காலை 10மணிக்கு நாலாயிர திவ்ய பிரபந்த கோஷ்டியும் பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு அம்பாள்கள் வைகுண்டநாயகி, சோரநாதநாயகி, ஸ்ரீதேவி, பூதேவியர்களுடன் உற்சவர் கள்ளபிரான் சுவாமி சயனக்குறட்டிற்கு எழுந்தருளினார். இரவு 7 மணிக்கு திருவாராதனம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி குரோதி வருட பஞ்சாங்கம் வாசித்தார். இதில், அர்ச்சகர்கள் ரமேஷ் நாராயணன், அனந்த பத்மநாபன், சீனு, ஸ்தலத்தார்கள் சீனிவாசன், கண்ணன், ஸ்ரீனிவாசன், தேவராஜன், ஸ்ரீகிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News