தொழிற்பயிற்சி மையத்தில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன்- 7

நீலகிரி மாவட்டத்தில் அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு வருகிற 7-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-31 14:25 GMT

தொழிற்பயிற்சி நிலையங்களில் விண்ணப்பிக்கலாம் 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024-ம் ஆண்டு சேர்க்கைக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி, 9-ம் முதல் 12-ம் வகுப்பு வரை தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்த மாணவ- மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

ஜூன் 6-ம் தேதி வரை பந்தலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, ஜூன் 7-ம் தேதி வரை ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, கூடலூர் அரசு நடுநிலைப் பள்ளி, கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளி, மஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் மாணவர் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது.

முகாமில் மாணவ- மாணவிகள் கலந்துக் கொண்டு கீழ் கண்ட தொழில் பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம். குன்னூர், உப்பட்டியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மேம்பட்ட இயந்திர தொழில்நுட்ப பணியாளர், கம்யியர் மின்சார வாகனம், தொழில்துறை இயந்திரவியல் மற்றும் எண்ணியல் உற்பத்தி தொழில்நுட்ப பணியாளர் பொருத்துநர், கம்மியர் (மோட்டார் வண்டி), தட்ப வெப்பம் மற்றும் குளிர்பதன தொழில்நுட்ப பணியாளர், கம்மியர் மின்னணுவியல் பயிற்சி அளிக்கப்படும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கம்பியாள், பற்ற வைப்பவர், குழாய் பொருத்துனர் ஆகிய பயிற்சி அளிக்கப்படும்.

மேலும் மாதம் ரூ. 750 உதவித்தொகை, விலையில்லா மிதிவண்டி, பாடப்புத்தகம், வரைபடக்கருவிகள், சீருடை மற்றும் காலணிகள் சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர், நவீன கழிப்பறை வசதிகள், வளாக நேர்காணல் உள்ளிட்ட வசதிகள் உள்ளது. புதுமைப்பெண் திட்டத்தில் பெண்களுக்கு ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் மதிப்பெண் சான்றிதழ்கள், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ் உள்ளிட்டவற்றுடன் நேரில் கலந்து கொள்ளலாம் என்று முதல்வர் வெங்கட கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். .....

Tags:    

Similar News