மனநல ஆலோசனை வழங்கும் சேவை துவக்கம்
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கும் சேவையை சுகாதார செயலாளர் ஆய்வு செய்தார்.;
Update: 2024-05-07 02:44 GMT
மனநல ஆலோசனை வழங்கும் சேவை துவக்கம்
2023 - 2024 ஆம் ஆண்டு 12-வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், மனநல ஆலோசனை வழங்கும் சேவையினை சுகாதார செயலாளர் ககன்தீப் சிங் பேடி இன்று தேனாம்பேட்டை, டி.எம்.எஸ் வளாகத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.