வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு
சென்னையில் வழக்கறிஞர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யகோரி சாத்தான்குளத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.;
Update: 2024-06-17 05:27 GMT
வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு
சென்னை திருவான்மியூர் அவ்வை நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் கடந்த 2 நாள்களுக்கு முன்பு மர்ம நபர்களால் கொலை செய்யப்படடார். வழக்கறிஞரை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் வழக்கறிஞர் பணி பாதுகாப்பு சட்டத்தினை நிறைவேற்றக் கோரியும் சாத்தான்குளத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியை புறக்கணித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த போராட்டத்தில் வழக்கறிஞர் சுரேஷ் தலைமையில் வழக்கறிஞர் முருகானந்தம் முன்னிலையில் வழக்கறிஞர்கள் அந்தோணி ரமேஷ் குமார், ராஜன் சுபாஷிஸ், வேணுகோபால், ராமச்சந்திரன், செல்வ மகாராஜா, வேம்படி, சுப்பையா, அருண், முத்துராஜ், ஈஸ்டர் கமல், கௌசல்யா உள்ளிட்ட பலர் ஈடுப்பட்டனர்.