வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெற கோரி நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2024-07-01 14:31 GMT
மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெற கோரி நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் வருகின்றனர்.

அரியலூர், ஜூலை.1- இந்திய தண்டனைச் சட்டம் , குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய சட்டங்களுக்குப் பதிலாக புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு இன்று முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது இச்சட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது என வழக்கறிஞர்கள் கடந்த சில நாட்களாக பல்வேறு போராட்டங்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இச்சட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுவதை கண்டித்தும் இச்சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தியும் அரியலூர் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்து நீதிமன்ற வளாகத்தின் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் போராட்டத்தின் போது இச்சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதால் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள், சாலையோர வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்படும் வகையில் இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வரும் சனிக்கிழமை வரை ரயில் மறியல் மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை என பல்வேறு போராட்டங்களை வழக்கறிஞர்கள் மேற்கொள்ள உள்ளனர் இதேப்போல் செந்துறை ஜெயங்கொண்டம் நீதிமன்ற வழக்கறிஞர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டு உள்ளனர்

Tags:    

Similar News