குழந்தை திருமணங்களுக்கு எதிரான சட்ட விழிப்புணர்வு முகாம்

அரியலூர் மாவட்ட வட்ட சட்ட பணிகள் ஆனை குழு சார்பில் குழந்தை திருமணங்களுக்கு எதிரான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2024-05-10 00:59 GMT

குழந்தை திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வு

அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான கிறிஸ்டோபர் உத்தரவின் பேரில் நேற்று சென்னிவனம் கிராமத்தில் குழந்தை திருமணங்களுக்கு எதிரான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும் முதன்மை சார்பு நீதிபதியுமான ரைஹானா பர்வீன் தலைமையேற்று நடத்தினார். அவர் தலைமை வகித்து பேசுகையில் " பெண்ணின் திருமண வயது 18 ஆகும். 18 வயது பூர்த்தியடையாத பெண்ணிற்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றமாகும்.21 வயது பூர்த்தியடையாத ஆண் குழந்தைகளுக்கும் திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றமாகும்.

குழந்தை திருமணம் செய்து வைப்போருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டணை அல்லது ஒரு லட்ச ரூபாய் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும். குழந்தை திருமணத்தை தடுக்க சமூக பொறுப்புடன் ஒவ்வொரு பொதுமக்களும் முன்வர வேண்டும். உங்கள் பகுதியில் குழந்தை திருமணம் நடைபெறுவதாக உங்களுக்கு தெரிய வந்தால் உங்களது கிராம நிர்வாக அலுவலரிடமோ, காவல் துறையினரிடமோ அல்லது சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடமோ தகவல் அளித்து குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும். இதைவிட எளிதாக 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் கொடுத்து குழந்தை திருமணத்தை தடுக்கலா.

தகவல் தெரிவிப்போரின் பெயர், முகவரி ரகசியம் காக்கப்படும். 18 வயது பூர்த்தியடையாமல் திருமணம் செய்யும் பெண்ணின் உடல் நலன் மிகவும் பாதிக்கப்படும். கல்வியும் பாதிக்கப்படும். பின்னர் வாழ்க்கை கேள்விக்குறியாகும். ஆகவே குழந்தை திருமணம் இல்லாத சமுதாயத்தை உருவாக்க, குழந்தை திருமணம் நடைபெறாத மாவட்டமாக அரியலூரை மாற்றிட பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்".இந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் செந்துறை காவல் உதவி ஆய்வாளர்கள் கோவிந்தராஜ் , செந்தில்முருகன், 1098 சைல்டு லைன் உதவியாளர் வீரபாண்டியன், சகி ஒருங்கிணைந்த சேவை மைய உதவியார் கமலி, சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் பட்டியல் வழக்கறிஞர் தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் 80க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்துகொண்டனர். இந்த விழிப்புணர்வு முகாமிற்கான ஏற்பாடுகளை அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உதவியாளர்கள் மற்றும் சென்னிவனம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News