இயக்கப்பட்ட பாம்பன் தூக்கு பாலம் - அணிவகுத்து கடந்த விசை படகுகள்
ராமேஸ்வரம் தீவையும் மண்டபம் நிலப்பரப்பையும் இணைப்பதில் பாம்பன் ரயில் பாலம் முக்கிய பங்காற்றி வந்தது. தற்போது புதிய ரயில் பால வேலை நடப்பதால் பழைய தூக்குப்பாலம் இனி தூக்கப்படாமல் சேவை நிறுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனால் பாம்பன் தூக்குப்பாலத்தில் ரெயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. வடக்கு கடல் பகுதியில் மீன்பிடி தொழில் ஈடுபட்டு வரும் விசைப்படகுகள் தெற்கு கடல் பகுதிக்கு செல்ல வேண்டும் என்றால் ரயில் தூக்குப்பாலம் தூக்கும் பட்சத்தில் தான் செல்ல முடியும்.இதையடுத்து விசைப்படகு மீனவர்கள் பாம்பன் தூக்கு பாலத்தை தூக்குவதற்காக துறைமுக அதிகாரிகளிடம் அனுமதி கோரியிருந்தனர். இதை அடுத்து இன்று பாம்பன் ரயில் தூக்குப்பாலம் தூக்கப்பட்டு வடக்கு பகுதியில் இருந்து தெற்கு கடல் பகுதிக்கு மீன்பிடி விசைப்படகுகள் ஒன்றன் பின் ஒன்றாக நீண்ட வரிசையில் கடந்து சென்றன.இதனை பாம்பன் சாலை பாலத்தில் நின்ற ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்ததோடு புகைப்படம் மற்றும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.