லயன்ஸ் கிளப் பதவியேற்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

லயன்ஸ் கிளப் பதவியேற்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

Update: 2024-06-30 12:16 GMT

பதவியேற்பு விழா 

திண்டுக்கல்லில் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா தனியார் கிளப்பில் நடைபெற்றது. புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பினை லயன்ஸ் கிளிப்பின் எல் சி ஐ எஃப் ஏரியா லீடர் பாண்டியராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய தலைவராக லயன் விஜயகுமார் செயலாளராக லியோ உதவி செயலாளராக முத்துக்குமார் பொருளாளராக சையது சூரஜ் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர்.

புதிய தலைவர் விஜயகுமார் பதவியேற்றதை தொடர்ந்து புதிய நிர்வாகிகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லைன்ஸ் கிளப் ரவீந்திரன் அவர்கள் புதிய நிர்வாகிகளுக்கு லயன் சங்கத்தின் அடையாளமாக பட்டன் அணிவித்து சங்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் புரவலர் திபூர்சியஸ் ஆகியோர் முன்னிலையில் திண்டுக்கல்லில் உள்ள பல்வேறு நல சங்கங்களுக்கு, மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News