கள்ளச்சாராய மரணம் : அதிகாரிகளிடம் இழப்பீடு பெற வேண்டும் - ஜவாஹிருல்லா

கள்ளச்சாராய மரணம் ஏற்படும் போது மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு இழப்பீடு கொடுக்கக் கூடாது. இதற்கு பதிலாக பொறுப்பாக இருக்கக்கூடிய மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அதிகாரிகள், கள்ளச்சாரயத்தை விற்றவர்களிடமிருந்து இழப்பீடு வசூலிக்க வேண்டும் என ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

Update: 2024-06-30 08:21 GMT

ஜவாஹிருல்லா.

சட்டப்பேரவை கூட்டத் தொடரை தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட போராட்ட வழக்குகள் கோவிட் காலத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் இந்த வழக்குகள் எல்லாம் திமுக அரசு திரும்ப பெறுவதாக அறிவித்த திரும்ப பெற்றிருக்கிறது. திரும்ப பெற்ற வழக்குகள் காவல் நிலையத்தில் இருக்கக்கூடிய மென் பொருள்களில் இருந்து நீக்கப்படாததால் பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் வேலைக்கு செய்ய முடியாமல் கடவுச்சீட்டு எடுக்க முடியாத நிலை இருக்கிறது.

இதை மறுபரிசீலனை செய்து அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ்நாடு சட்டமன்றத்தில் மதுவிலக்கு சட்டத்தில் தண்டனைகளை கடுமையாக்க கூடிய பல்வேறு விதிமுறைகள் சேர்க்கப்பட்டிருக்கிறது. கள்ளச்சாராயம் மரணம் ஏற்படும் போது மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு இழப்பீடு கொடுக்கக் கூடாது. அதற்கு பதிலாக இதற்கு பதிலாக பொறுப்பாக இருக்கக்கூடிய மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அதிகாரிகள் கள்ளச்சாரயத்தை விற்றவர்கள் என அவர்களிடமிருந்து இழப்பீடு வசூலிக்க வேண்டும்.

கள்ளச்சாராயம் மரணங்கள் ஏற்படும் போது மாவட்டங்கள் அதிகாரிகள் பொறுப்பாக்கப்படுவார்கள் என்று சொன்னார் அது சட்டபூர்வமாக கொண்டு வர வேண்டும். தமிழ்நாட்டினுடைய பொருளாதாரம் நாட்டிற்கே உதாரணமாக இருக்கிறது அப்படிப்பட்ட தமிழ்நாட்டை மதுப்பழக்கமும் போதைப் பழக்கமும் முற்றிலும் இல்லாத ஒரு மாநிலமாக உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

Tags:    

Similar News