மதுபானங்கள் விலை உயர்வு : மதுபிரியர்கள் புலம்பல்

தூத்துக்குடியில் மதுபானங்கள் விலை உயர்ந்துள்ளதால் சில்லறை பிரச்சனை காரணமாக கூடுதல் செலவு எற்படுவதாக மது பிரியர்கள் புலம்பி வருகின்றனர். 

Update: 2024-02-02 03:52 GMT

டாஸ்மாக் 

தமிழகம் முழுவதும் மதுபானங்களில் விலை நேற்றுமுதல் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி. அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் விலை ரூ.20 உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும், 650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.  தூத்துக்குடியில் இந்த விலை உயர்வு நேற்று முதல்  அமலுக்கு வந்துள்ளது.

இந்த விலை உயர்வால் மது பிரியர்களுக்கு புதிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சாதாரண மது (குவார்ட்டர்) 180 மி.லி. விலை ரூ.130க்கு விற்கப்பட்ட நிலையில் விலை உயர்வு காரணமாக 140 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மது பாட்டில்களுக்கு கூடுதலாக 5 வசூல் செய்யப்படுகிறது. இதனால் மது பிரியர்கள் ரூ.145 செலுத்த வேண்டியுள்ளது.  ஆனால் கடைகளில் 150 ரூபாய் கொடுத்தால் சில்லறை இல்லை என்று கூறுகிறார்கள். மது வாங்கும் ஆர்வத்தில் அவர்கள் 150 கொடுத்து மதுவை வாங்கிச் செல்கின்றனர். சிலர் சில்லறை கேட்டு தகராறு செய்கின்றனர். இதனால் கூடுதலாக ரூ.5 கொடுக்க வேண்டியுள்ளதாக மது பிரியர்கள் புலம்பி வருகின்றனர். விலை உயர்ந்தாலும் டாஸ்மாக் கடைகளில் மக்கள் கூட்டம் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News