கேட்டது மூனு..கொடுத்தது ரெண்டு - விசிகவுக்கு பல்பு கொடுத்த திமுக

லோக் சபா தேர்தலில் விசிகவுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கீடு செய்த திமுக

Update: 2024-03-08 10:42 GMT

திமுக, விசிக கூட்டணி

லோக் சபா தேர்தலில் விசிக கட்சிக்கு இரண்டு தொகுதிகளை ஒதுக்கீடு செய்து திமுக கட்சி அறிவித்துள்ளது.

லோக் சபா தேர்தலை ஒட்டி கூட்டணி பேச்சுவார்த்தையில் திமுக ஈடுபட்டு வருகிறது. தனது தோழமை கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் திமுக தொகுதி பங்கீடு விவகாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, இன்று அறிவாலயம் வெளியிட்ட அறிவிப்பில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தகள் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கி திமுக தலைமை அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பில், அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும், அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் அதாவது விழுப்புரம் தனித்தொகுதி மற்றும் சிதம்பரம் தனித்தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. விசிக கட்சிக்கு 3 தொகுதிகளை ஒதுக்கீடு செய்யுமாறு திருமாவளவன் கேட்ட நிலையில், 2 தொகுதிகளை மட்டுமே திமுக உறுதி செய்துள்ளது.

இந்நிலையில், தொகுதி பங்கீட்டிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “திமுக கூட்டணியில் ஒரு பொது தொகுதியும், 2 தனித் தொகுதிகளும் கேட்டோம். விசிகவுக்கு 2 தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம். கடந்த மக்களவைத் தேர்தல் போலவே பானை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளோம்” என்றார்.

இதேபோல் மாக்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா இரண்டு தொகுதிகளை திமுக ஒதுக்கீரு செய்துள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு இடமும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதிமுகவுக்கு ஒரு லோக் சபா மற்றும் ஒரு மாநிலங்களை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 26 தொகுதிகளில் திமுகவும் எஞ்சிய தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடவும் திமுக முடிவெடுத்துள்ளது.

அதன்படி திமுகவில் விசிக, மதிமுக, முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிகள் கூட்டணியை உறுதி செய்துள்ளது. இதில் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மட்டும் தொகுதியை இறுதி செய்யாமல் இழுபறி செய்துவருகிறது. 

திமுகவில் கூட்டணி உறுதி செய்த தொகுதிகள்:

மதிமுக - 2 ( லோக்சபா+ராஜ்யசபா)

இந்திய யூனியன் மூஸ்லிம் லீக் - 1

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 2

இந்திய கம்யூனிஸ்ட் - 2

விசிக - 2

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 1

Tags:    

Similar News