ஜாபர் சாதிக்கின் சகோதரர்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ்

ஜாபர் சாதிக்கின் சகோதரர்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-03-12 15:54 GMT

Lookout notice 

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி உள்ள திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளிநாடுகளில் போதைப்பொருள் நெட்வொர்க் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை தீவீரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் ஜாபர் சாதிக்கின் சகோதரர்களான முகமது சலீம், மைதீன் ஆகியோருக்கும் தொடர்பு உள்ளது. அவர்கள் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால் 2 பேருக்கும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் லுக்அவுட் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

அனைத்து விமான நிலையங்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் திட்டத்தை போடுவது ஜாபர் சாதிக்காக இருந்தாலும் அதனை சிக்கி கொள்ளாமல் கடத்துவதில் முக்கிய பங்கு 2 சகோதரர்களுக்கும் இருப்பதை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

அதனால் அவர்கள் பதுங்கி இருக்கும் இடத்தை கண்டறிந்து கைது செய்வதற்காக அதிகாரிகள் தீவிரம் காட்டி உள்ளனர்.

Tags:    

Similar News