வழி தவறி வந்த சிறுவன் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைப்பு
ஜெயங்கொண்டம் அருகே வழி தவறி வந்த சிறுவனை தனியார் பஸ் கண்டக்டர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
கும்பகோணத்தில் இருந்து திருப்பனந்தாள் வழியாக ஜெயங்கொண்டம் நோக்கி வந்த தனியார் பஸ்ஸில் இன்று (10.05.24) திருப்பனந்தாள் பஸ் நிறுத்தத்தில் 9 வயது சிறுவன் ஏறியுள்ளார் பஸ் பயணத்தின் போது பஸ் கண்டக்டர் வினோத் சிறுவனிடம் டிக்கெட் கேட்டுள்ளார் அப்போது எங்கே செல்ல வேண்டும் என கேட்டதற்கு சிறுவன் செய்வதறியாது என்ன சொல்வது என தெரியாமல் திகைத்து நின்றான் யார்? எங்கே செல்ல வேண்டும்? என எதுவும் சிறுவன் சொல்லாததால் சிறுவனை பஸ் கண்டக்டர் வினோத் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
போலீசார் சிறுவனுக்கு உணவு வாங்கி கொடுத்து விசாரணை செய்தனர். அப்போது திருச்சி தொட்டியம் கிராமத்தை சேர்ந்த சூர்யா என்றும் தனது தந்தை மாரியப்பன், தாயார் அமுதா எனவும் சிறுவன் கூறியுள்ளார். திருப்பனந்தாள் எதற்கு வந்தாய் என கேட்ட போது கும்பகோணம் அருகே எனது அம்மாவின் ஊர் உள்ளதாகவும் சிறுவன் கூறியுள்ளார். சிறுவன் கூறிய அடையாளத்தைக் கொண்டு அவனது பெற்றோரை தொடர்பு கொள்ள போலீசார் முயற்சித்து வருகின்றனர்.