மயிலாடுதுறையில் கம்ப்யூட்டர் உதவியுடன் கார் ஓட்ட கற்று கொடுக்கும் எந்திரம்

மயிலாடுதுறையில் முதன்முறையாக கார் கற்றுகொடுக்க நவீன கணினி எந்திரம் திறக்கப்பட்டுள்ளது;

Update: 2024-01-08 08:47 GMT

நவீன கணினி இயந்திரம்

மயிலாடுதுறையில் கார் ஓட்ட கற்றுக் கொடுக்கும் (Car Stimulated) எந்திரம்  நிறுவப்பட்டது. முன்பக்கத்தில் மூன்று கணினிகள் வடிவமைக்கப்பட்டு உண்மையான காரில் இருப்பது போல் உட்புறம் ஸ்டியரிங், கியர் உள்ளிட்ட இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்ட கார் நிறுவப்பட்டுள்ளது.

இந்த காரை சாவி போட்டு வழக்கமான கார் போலவே ஸ்டார்ட் செய்ததும் கம்ப்யூட்டர் உதவியுடன் முன்பக்க திரையில் சாலைகள் பக்கவாட்டு கண்ணாடிகள் ஆகியவற்றின் மூலம் காட்சி அமைக்கப்பட்டுள்ளது இதன் மூலம் சாலையில் காரை ஓட்டிச் செல்லும் உணர்ச்சி ஏற்படும் மாசு கட்டுப்பாடு மற்றும் முதலில் கற்றுக் கொள்பவர்கள் விபத்துக்கள் இல்லாமல் இயக்கி பழக முடியும்.

Advertisement

இந்த காரை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி  துவக்கி வைத்தார். வட்டாரப் போக்குவரத்து அதிகாரி மற்றும் பல உடனிருந்தனர்.  துவக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் காரை இயக்குவதற்கு அதன் இருக்கையில் அமர்ந்து சாவி போட்டவுடன் பீப் ஒலி எழுந்த வண்ணம் இருந்தது. அதனைப் பார்த்த பயிற்சியாளர்கள் சீட் பெல்ட் போட்டாவிட்டால் கார் ஸ்டார்ட் ஆகாது என்று தெரிவித்தார் தொடர்ந்து சீட் பெல்ட் போட்டபடி மாவட்ட ஆட்சியர் பாவனை இயந்திரத்தில் ஆர்வத்துடன் காரை இயக்கினார்.  

இந்த பாவனையாக்கி எந்திரம் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் முதல்முறையாக மயிலாடுதுறையில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News