சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மே மாதம் விடுமுறை.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மே 1ம் தேதி - ஜூன் 2 ம் தேதி வரை கோடை விடுமுறை என்பதால் அவசர வழக்குகளை திங்கள், செவ்வாயில் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மே 1ம் தேதி முதல் ஜூன் 2 ம் தேதி வரை கோடை விடுமுறை. விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை வாரந்தோறும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் தாக்கல் செய்யலாம். நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, குமரேஷ்பாபு, கலைமதி மே 8,9ம் தேதிகளில் அவசர வழக்குகளை விசாரிப்பர். மே 15,16ம் தேதிகளில் நீதிபதிகள் பி.டி.ஆஷா, சக்திவேல், செந்தில்குமார் ஆகியோர் வழக்குகளை விசாரிப்பர்.
மே 22, 23ம் தேதிகளில் நீதிபதிகள் சுவாமிநாதன், சரவணன், பாலாஜி ஆகியோர் விடுமுறை கால நீதிபதிகளாக செயல்படுவர். மே 29, 30ம் தேதிகளில் நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத், சவுந்தர் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் அவசர வழக்குகளை விசாரிப்பர். இதேபோல மதுரை கிளையில் அவசர வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் வேல்முருகன், அப்துல் குத்தூஸ், தனபால், வடமலை, ராஜசேகர், மஞ்சுளா, ஸ்ரீமதி, குமரப்பன், விஜயகுமார், விக்டோரியா கவுரி, அருள் முருகன் ஆகியோர் விடுமுறை கால நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ஜோதிராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.