கா தி ஃபாரஸ்ட் திரைப்படம் வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
நடிகை ஆண்ட்ரியா நடிக்கும் கா தி ஃபாரஸ்ட் திரைப்படம் வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Update: 2024-03-29 06:14 GMT
கா தி ஃபாரஸ்ட் பட தயாரிப்புக்காக ஷாலோம் ஸ்டூடியோ உரிமையாளர் ஜான் மேக்ஸ் பெற்ற ரூ.20 லட்சத்தை திருப்பித் தராமல் படத்தை வெளியிட உள்ளதாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. படத்தின் மொத்த காப்புரிமையும் தனக்கு சொந்தமானது என அறிவிக்கவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நடிகை ஆன்ட்ரியா நடித்துள்ள கா – தி ஃபாரஸ்ட் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏப்ரல் 12 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி பட தயாரிப்பாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.