மூதா அம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்

கலவை அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ மூதா அம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2023-12-07 09:07 GMT

கலவை அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ மூதா அம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கலவை அருகே ஸ்ரீ மூதா அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம். ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள பள்ள நாகலேரி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மூதா அம்மன், ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ சப்தகன்னி அம்மன், நூதன ஆஞ்சநேயர் ஆகிய ஆலயங்களுக்கு ஜூர்னோத்தாரன அஷ்டபந்தன சமர்ப்பண மஹா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோவிலின் எதிரே அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை கலசத்தில் வைத்து முதற்கால யாக பூஜையாக கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பிரவேச பூஜை, நவகிரக ஹோமம், பூர்ணாஹூதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.

இரண்டாம் கால யாக பூஜையில், ஸ்ரீ சூக்த துர்கா பூஜை, சூக்த ஹொமம், நாடி சந்தானம், பூர்ணாஹூதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றதோடு வேத பட்டாச்சியர்கள் மந்திரங்கள் ஓதி கலசத்தை தலையில் சுமந்து மங்கல இசை முழங்க கோயிலை சுற்றி வளம் வந்து கலசம் விமான கோபுரம் வந்ததும் பல்வேறு மந்திரங்கள் ஓதி மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அனைத்து கருவறை சாமிகளுக்கு கும்பாபிஷேக தண்ணீர் ஊற்றப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் பள்ளநாகலேரி சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக திமிரி ஒன்றிய கழக செயலாளர் சொரையூர் குமார், விழா குழு நிர்வாகி வி சி க நாகலேரி சிவா, ஊராட்சி மன்ற தலைவர் ஆதிலட்சுமி ரேணுகோபால் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்..

Tags:    

Similar News