மழை வேண்டி மகா சரபேஸ்வரர் ஹோமம்!

கறியாக்குடல் பகுதியில் சரபேஸ்வரர் பீடத்தில் மழை வேண்டி மகா சரபேஸ்வரர் ஹோமம் நடைபெற்றது.

Update: 2024-04-25 08:18 GMT

கறியாக்குடல் பகுதியில் சரபேஸ்வரர் பீடத்தில் மலை வேண்டி மகா சரபேஸ்வரர் ஹோமம் நடைபெற்றது.


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சியில் உள்ள கறியாக்குடல் பகுதியில் சரபேஸ்வரர் பீடம் அமைந்துள்ளது. இந்த பீடத்தில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு உலக மக்களின் நன்மைக்காகவும், மழை வேண்டியும் மகா சரபேஸ்வரர் ஹோமம் நடைபெற்றது. இந்த ஹோமத்திற்கு சின்னத்திரை நடிகர் அறந்தாங்கி சங்கர், கறியாக்குடல் சரபேஸ்வரர் பீடாதிபதி ஞானப்பிரகாச சுவாமிகள் ஆகியோர் தலைமை தாங்கினர்.

முன்னதாக பீடத்தில் உள்ள சரபேஸ்வரர், பிரத்தியங்கரா மற்றும் சூலாயணி துர்கா ஆகிய தெய்வங்களுக்கு நெய், சந்தனம், பால், இளநீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா சரபேஸ்வரர் ஹோமம் நடைபெற்றது. இதில் பனப்பாக்கம், நெமிலி, ரெட்டிவலம், புன்னை சிறுணமல்லி, பெரப்பேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News