காவேரிப்பாக்கம் மின்வாரிய அலுவலகம் அருகே ஆண் பிணம் மீட்பு

காவேரிப்பாக்கம் மின்வாரிய அலுவலகம் அருகே ஆண் பிணம் மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Update: 2023-12-25 08:36 GMT

விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார்

 ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த மின்வாரிய அலுவலகம் அருகே சுமார் 40-வயது மதிக்க தக்க ஆண் பின்னம் இருப்பதாக காவேரிப்பாக்கம் போலிசாருக்கு இன்று காலை தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் பேரில் ராணிப்பேட்டை டிஎஸ்பி பிரபு, அரக்கோணம் டிஎஸ்பி ரவிச்சந்திரன் , இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதில் ராமாபுரம் பகுதியில் இருந்து திருப்பாற்கடல் செல்லும் சாலையில், விவசாய கரும்பு தோட்டத்தின் அருகே இறந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தில் தலை, மற்றும் முகம் ஆகிய பகுதிகளில் பலத்த காயம் இருந்தது போலிசார் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணையில் இறந்து கிடந்தவர் சரவணன்(40), என்பதும் இவர் இருளர் குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், கிடைத்த வேலை செய்து தனது மனைவியுடன் நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வந்தவர் என்பதும் தெரிய வந்தது.

இவர் நேற்று கூலி வேலை செய்து வந்த பணத்தில் அதிக மதுபோதையில் இருந்து வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இதுதொடர்பாக இவருடன் மது குடித்த இவரது உறவினர் மற்றும் மனைவியிடம் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இறந்தவருக்கும் அவரது உறவினருக்கும் போதையில் ஏதாவது தகராறு ஏற்பட்டு இறந்தாரா இல்லை விபத்து ஏதாவது ஏற்பட்டு இறந்தாரா என பல்வேறு கோணங்களில் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News